Pages

Sunday, 11 August 2013

ரத்த ஓட்டத்தை சீராக்க!

மல்பெர்ரி பழம் சுவையுடன் கூடிய சத்து மிகுந்த பழம். மல்பெர்ரி பழங்கள் ஆல்பா மரத்திலிருந்து கிடைக்கிறது. ஊட்டச்சத்துகளை அதிகம்  கொண்டிருக்கும் இந்த பழத்தின் இலைகள் பட்டு
புழுக்களுக்கு உணவாக பயன்படுகிறது. திராட்சை போன்று காணப்படும் மல்பெர்ரி பழம் பளபளப்பான  ஒளி பச்சை நிறத்திலும், சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.
ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்: 
மல்பெர்ரி பழங்கள், இலைகள், தண்டுகள் என அனைத்திலும் ஆண்டியாக்ஸிடண்ட்ஸ் சக்தியை மூல ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது.. குறிப்பாக  ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான ரெஸ்வெராட்ரலினை அதிக அளவு பெற்றிருக்கிறது. மல்பெர்ரியை ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழகமான டெக்சாஸ்  சுகாதார அறிவியல் மையம் மல்பெர்ரியில் உள்ள ரெஸ்வெராட்ரலின் நோய்யெதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவுகிறது என தெரியபடுத்தி உள்ளனர்.
நோய் எதிர்ப்பு:
மல்பெர்ரி பழங்களில் இரத்த விழுங்கணுக்களினுள் செயல்படுத்த பயன்படும் ஆல்கலாய்டுகளை கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை  தடுக்கும் பழம் என கருதுகின்றனர். ஏனெனில் மல்பெர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரலின் ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்  கொண்டது.
இரத்த சர்க்கரைக்கு துணைபுரிகிறது: 
மல்பெர்ரி பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தஅழுத்தத்தை குறைத்து, இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை சீராக இயக்குகிறது.  இரத்தகட்டிகள், பக்கவாதம், போன்றவற்றிக்கு விரோதமாக செயல்பட்டு அவற்றை அழிக்கிறது. உலர்ந்த மல்பெர்ரி பழத்தில் புரதம், வைட்டமின் சி  மற்றும் கே, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இது உடல்நலத்தை காக்கும் சிறந்த உணவாகும்.  

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads