Pages

Sunday, 11 August 2013

சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்:

சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து
பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்
சிறுநீரக பிரச்சனையில் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள்:
1.உடல எடை இழப்பு
2.குமுட்டல் வாந்தி
3.பொதுவான உடல்நலக்குறைவு
4.சோர்வு
5.தலைவலி
6.அடிக்கடி ஏற்படும் விக்கல்
7உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும் போது ஏற்படும் அறிகுறிகள்:
1.வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
2.இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
3.சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
4.வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
5.மந்தமான துங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை ,
6.நினைவற்ற நிலை
7.தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
8.தோலில் வெள்ளைநிற படிகங்கள்
9.கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல்
10.இரவு நேரங்களில் அதிக அளவில்  சிறுநீர் கழித்தல்
11.அதிக தாகம் ஏற்படுதல்
12.தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
13.நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
14.சுவாசம் நாற்றம் எடுத்தல்
15.உயர் இரத்த அழுத்தம்
16.பசியின்மை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads