Pages

Tuesday, 25 June 2013

தந்திக்கு இணையான சேவை 10 ரூபாய்க்கு அஞ்சல் துறை அளிக்கிறது

சென்னை:
தந்தி சேவை முடிவுக்கு வர உள்ள நிலையில் அதே மாதிரியான சேவையை குறைந்த கட்டணத்தில்  நீண்ட காலமாக வழங்கி வருவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' தந்தி சேவையை போன்றே ''ஈ,போஸ்ட்'' என்ற மின், அஞ்சல் சேவையை வழங்கி வருகிறோம். ஒரு பக்க (ஏ4) செய்தியை அனுப்ப 10 ரூபாய் மட்டுமே கட்டணம். தந்திக்கு வசூலிக்கும் கட்டணத்தை விட இது குறைவான கட்டணமாகும். அனுப்ப விரும்பும் செய்தியை அச்சிட்டோ, எழுதியோ கொடுக்கலாம். 

அதனை ஸ்கேன் செய்து முகவரியில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அங்கு அதனை அச்செடுத்து வழக்கமான கடிதம் போல் சம்பந்தப்பட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சலகங்களில் இந்த வசதி உள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads