Pages

Monday 24 June 2013

கண்ணிவெடிகளைக் கண்டறியும் தேனீக்கள்!

வெயில் காலத்தில் பூக்கள், நன்கு பூக்கும். இதனால் தேனீக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். கோடை காலத்தை, தேன் சீசன் என்பர். தற்போது தேனீக்களை, கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை கண்டறியவும் பயன்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். போர் நடந்த நாடுகளின் தரைப்பகுதிகளில் எல்லாம் கண்ணிவெடிகள் உள்ளன. கண்ணி வெடிகளைக் கண்டறிந்து, அகற்றுவது சவாலான செயல். இதில் நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. கண்ணிவெடிகளைக் கண்டறியும் பரிசோதனையில் இதுவரை துப்பறியும் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தேனீக்களும் பயபடுகின்றன. தேனீக்களுக்கு நுகர்ந்து பார்க்கும் திறன், மற்ற உயிரினங்களை விட அதிகமாக உள்ளது. இந்த திறனைப் பயன்படுத்தி இந்த சோதனை செய்யப் பட்டுள்ளது. உலக நாடுகளில் புதைந்துள்ள ஆயிரக் கணக்கான கண்ணிவெடிகளை கண்டுபிடித்தாக வேண்டும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads