தேவையான பொருட்கள்:
கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை - 6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம் அரைக்கவும். வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.
கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். துணியில் ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத் தவிர்க்கலாம்.

No comments:
Post a Comment