Pages

Wednesday, 24 April 2013

கோடையை சமாளிக் ஊட்டி, கொடைக்கானல் வால்பாறைக்கு சுற்றுலா:

     பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடையை சமாளிக்க பல்வேறு மலை வாசஸ்தலங்களுக்கு அழைத்து செல்வார்கள். குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

குறைந்த செலவில் உறுதியான ரெயில் டிக்கெட்டுடன் சுற்றுலா பயணத்தை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்து வருகிறது.

ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா திட்டங்ளை அறிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தோறும் பொள்ளாச்சி, வால் பாறைக்கான சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

5 நாட்கள் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் ஒருவருக்கான கட்டணம் ரூ. 6080. தங்கும் அறை, வாகனத்தில் சென்று பார்வையிடுதல், உறுதி செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி ரெயில் டிக்கெட் போன்றவை இதில் அடங்கும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலம் ஆழியார் மற்றும் ஆன்மிக கோவில்களுக்கு செல்லக்கூடிய இந்த பயண நாட்கள் 5 ஆகும். இதற்கு ஒருவருக்கான கட்டணம் ரூ. 3910. சென்னை- கொடைக்கானல் பேக்கேஜ் 4 நாட்கள் பயணம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த சுற்றுலா பயணத்திற்கு ஒருவருக்கான கட்டணம் ரூ. 3690. வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை திரும்பி வருவார்கள். ஊட்டி, முதுமலை சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும். இந்த பேக்கேஜ் ஒருவருக்கு ரூ. 4720 கட்டணமாகும்.

5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா திட்டத்தில் பயணிகள் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் அழைத்து செல்லப்படுவார்கள். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சுற்றுலா திட்டமும் நடைமுறையில் உள்ளது. 5 நாட்கள் கொண்ட இந்த பேக்கேஜில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான கட்டணம் ரூ. 4120.

இதேபோல சென்னை- கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை வழியாக மீண்டும் சென்னை திரும்புதல் சுற்றுலா பேக்கேஜ் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து புறப்படும். இதற்கான கட்டணம் ரூ. 4850. சுற்றுலா 5 நாட்கள்.

சென்னை-மதுரை, ராமேசுவரம் சுற்றுலா பேக்கேஜ் 4 நாட்களாகும். இதற்கான கட்டணம் ரூ. 3160. சுற்றுலா செல்ல விரும்புவர்கள் உறுதியான பயணம், தங்குமிடம், இடங்கள் பார்வையிடுதல் போன்ற சிறப்பு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்து தருகிறது.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தகவல்மையம் செயல்படுகிறது. 044-6459 4959, 90031 40681, 90031 40682 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.railtourism.com என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads