Pages

Wednesday, 19 December 2012

பூமியைப் போன்று மனிதன் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு


பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.


இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads