Pages

Thursday, 20 December 2012

மாசாணியம்மன் கோயில் - ஆனைமலை.


மாசாணியம்மன் கோயில்கோயம்புத்தூர் மாவட்டம்பொள்ளாச்சி தாலுகா,ஆனைமலை,உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். அம்பாளுக்கு எதிரே மகாமூனீசுவரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேசுவரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால், பல பிரச்னைகளைச் சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள். அவளது தரிசனம் பெற ஆனைமலைக்கு செல்ல வேண்டும்.


இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் “மயானசயனி” என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் “மாசாணி” என்றழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது.

பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைச் செல்வம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் வளாகத்தில் உள்ள “நீதிக்கல்லில்” மிளகாய் அரைத்து அப்பினால், திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும், “முறையீட்டுச்சீட்டில்” குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும். தை மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறுகிறது. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads