தேவை:
கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி,
எண்ணெய் - சிறிது.
செய்முரை:
எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். ஒரு ஈரத் துணியின் மேல் அடை போலத் தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரு புறமும் நன்கு வேக விட்டு எடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரையை வதக்கியும் சேர்க்கலாம்.
Key word:கேழ்வரகு கார அடை.

No comments:
Post a Comment