பயனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக 51-மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்!!
பயனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 51-மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று நேரடியாக மானியம் வழங்குவதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் நேரடியாக கிடைக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பயனாளிகளும் வங்கி கணக்கு தொடங்குவது அவசியம். வங்கி கணக்கு தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் இந்த திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதற்கட்டமாக 51-மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 10-லட்சம் பேர் பயன்பெறுவார்கள் ஆதார் வங்கி கணக்கு மூலம் பயனாளிகளுக்கு மானியம் அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூபாய் 40-ஆயிரம் வரை மானியம் கிடைக்கும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். இத்திட்டங்கள் கணினி மயமாக்கப்படும் என்ற அவர், இத்திட்டங்களால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment