Pages

Sunday, 18 November 2012

தொலைந்து போன பொருள் கிடைக்க வேண்டுமா?



அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக  அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம்
என்பதும்  பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு  வெல்லம் கரைத்து வைக்கிறேன். எனக்கு தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்‘ என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும்  அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடமுடியாத அன்பர்கள் இந்த ஆலயத்தின்  நாயகியை வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர். தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி,  கல்யாண மாரியம்மன், ராகு-கேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி,  வகுளாதேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும்  பாதையில் உள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads