Pages

Monday, 19 November 2012

வாய் நாற்றத்தை தடுக்கும் பொருட்கள்.


நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை

தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாம்.


• கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

• நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.



• உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் சமையலறையில் இருக்கும் 

ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். 


• உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.


Key word:வாய் நாற்றத்தை தடுக்கும
பொருட்கள்:கொத்தமல்லி,ஏலக்காயை,கிராம்பு.



No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads