காரைக்குடி :
தனியார் கல்லு£ரிகளில் நிர்வாக ஒதுக்கீடு (மேனேஜ்மென்ட்) கோட்டாவில் சேர்ந்து படிப்பவர்களும் கல்வி கடன் பெறலாம் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். வகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எல்சிடிஎல் கலையரங்கத்தில் மாவட்ட வங்கியாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பாலசந்தர் வரவேற்றார். விழாவில் 42 மாணவர்களுக்கு ரூ.1.02 கோடி கல்வி கடன்களை வழங்கி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மூலம் அனைவருக் கும் கல்வி என்பது நிறைவேற்றப்படுகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங் களில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகளவில் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 15 சதவித மாணவர்கள்தான் உயர்கல்விக்கு செல்கின்றனர். நடப்பாண்டில் ரூ.5 ஆயிரத்து 75 கோடி விவசாய கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது கல்வி கடன் பெறு வது என்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. பொது மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண், எஸ்சி. எஸ்டி மாணவர்கள் 55 சதவித மதிப்பெண் பெற்றால் போதும். முன்பு நிர்வாக (மேனேஜ்மென்ட்) ஒதுக்கீடு கோட்டாவில் இடம் கிடைத்தவர்களுக்கு கல்விகடன் வழங்கப்படவில்லை.
தற்போது அவர்களுக் கும் கல்வி கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வீஸ் ஏரியா என கூறி மாணவர்களை வங்கிகள் அலைய விடக்கூடாது. யார் எங்கு வேண்டுமானாலும் கடன் பெறலாம். வங்கி கிளை மேலாளர்கள் கல்வி கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரம் கிடையாது.
நாடு முழுவதும் ரூ.52 ஆயிரத்து 482 கோடியும் தமிழகத்தில் ரூ.13 ஆயிரத்து 554 கோடி வழங்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
Key word:நிர்வாக ஒதுக்கீடு கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கல்வி கடன்

No comments:
Post a Comment