Pages

Monday, 19 November 2012

இன்று முதல் பழநி-திண்டுக்கல் அகல பாதையில் ரயில் இயக்கம்

திண்டுக்கல் :
 திண்டுக்கல்,பழநி அகல ரயில்பாதையில் பயணிகளுக்கான முதல் ரயில் இன்று மதியம் 1 மணிக்கு கிளம்புகிறது. இதற்கான கட்டணம் 10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லிருந்து போத்தனூர்  வரை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து பயணிகள் ரயிலை இயக்க அனுமதி வழங்கினர்.

இதன்படி இன்று மதியம் 1 மணிக்கு அகல் ரயில்பாதையில் முதல் பயணிகள் ரயில் செல்ல உள்ளது. 2.30க்கு பழநி செல்லும் இந்த ரயில் மீண்டும் 3.15க்கு கிளம்பி திண்டுக்கல்லிற்கு 4.45க்கு வரும். மறுபடியும்  5.30 மணிக்கு  பழநி செல்லும். பழநியில் இருந்து மீண்டும் இரவு 7.45க்கு கிளம்பி திண்டுக்கல்லிற்கு 9.30 மணிக்கு வரும். முதல்நாள் இரு முறை இயக்கப்படும் இந்த ரயில் மற்ற நாட்களில் 3 முறை இயக்கப்படும்.

 திண்டுக்கல்லில் இருந்து காலை 5.15, பிற்பகல் 1 மணி, மாலை 5.30 மணிக்கும், பழநியில் இருந்து காலை 8, 3.15, இரவு 7.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும். 
இந்த ரயிலில் பயண கட்டணமாக 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஸ்சைப் பொறுத்தவரை ஸீ24, 28 என்று எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட் என்ற பல்வேறு விதங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads