பிரபல தெலுங்கு நடிகர் நானி. இவர் ‘வெப்பம்‘ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் தயாரான ‘நான் ஈ’ படத்திலும் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
நானியும், விசாகபட்டினத்தை சேர்ந்த அஞ்சனாவும் 5 ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள். இதை தொடர்ந்து நானி, அஞ்சனா திருமணம் விசாகபட்டினத்தில் நடந்தது. நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள். ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கிறது.

No comments:
Post a Comment