Pages

Sunday, 28 October 2012

அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்:


அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: 

காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக  முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர்.கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
      வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர்.
      தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி,  பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.
Key word:அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads