Pages

Tuesday, 30 October 2012

கரும்புச்சாறு:


மது நாட்டின் அரிசி, கோதுமை அடுத்து கரும்பு மிகவும் அதிகமாக உற்பத்தியாகிறது. வடநாடுகளில் கரும்புச்சாறை அதிகம் பருகுகின்றனர். தமிழ் நாட்டில் இதன் பயன்பாடு பெருக வேண்டும்.


இதிலிருந்து பெறப்படும் வெள்ளைச் சீனியால், பலவகை இனிப்புகளால் நீரிழிவு நோய்கள் பெருகிவிட்டன. எனவே அன்பர்கள் வெள்ளைச் சீனியைத் தவிர்த்து அதற்க்கு பதிலாக கரும்புச்சாறு, பேரீட்சை, தேன், நாட்டு வெல்லம் தாராளமாக பயன்படுத்தலாம்.

100 கிராம் கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்:
நீர்=90%
மாவுப்பொருள்=9%
புரோட்டின்=0.3%
கொழுப்பு=0.2%
கால்சியம்=6 யூனிட்
இரும்புத் தாது=2 யூனிட்
வைட்டமின் B1=0.02 யூனிட்
வைட்டமின் B3=0.02 யூனிட்
வைட்டமின் C=10 யூனிட்
மருத்துவக் குணங்கள்:
  • உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது.
  • காமாலை வராமல் தடுக்கிறது.
  • சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும்.
  • அதிக வெப்பசக்தி தரவல்லது.
  • உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.
கச்சிதமான உடலுக்கு தினமும் கரும்புச்சாறு அருந்தலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads