உலக அளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து உலக வர்த்தக மையத்தின் தலைவர் மேலி கூறியதாவது:-
உலக அளவில் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதுபோல் பிரேசில், மெக்சிகோ, மலேசியா போன்ற நடுகளும் டாப்-25 நாடுகள் பட்டிலில் உள்ளன.
சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் வளர்ச்சி 2011-ம் ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக உள்ளது. உலக அளவில் 2008-ம் ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சி 33 சதவீதமாக இருந்தது. தற்போது இது 50 சதவீத வளர்ச்சியை எட்டி உள்ளது.
உலக அளவில் ஒட்டுமொத்த உற்பத்தி 1980-ம் ஆண்டில் 40 சதவீதமாக இருந்தது. தற்போது அது 60 சதவீதத்தை எட்டி உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு முறையான ஏற்றுமதி-இறக்குமதி சட்டம் இருப்பதால் சில பாதிப்புகள் உள்ளன.
இவ்வாறு மேலி கூறினார்.
No comments:
Post a Comment