நடிகை ஸ்வேதா மேனனுக்கு நேற்றுமுன்தினம் பெண்குழந்தை பிறந்தது. பிரசவத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி தனது படத்துக்காக மூன்று கேமராவுடன் படம் பிடித்தார். மலையாள இயக்குனர் பிளஸ்சி ‘களிமண்’ என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் இடையே உள்ள ஆத்ம பந்தம்தான் படத்தின் மூலக் கரு. இந்நிலையில் ஸ்வேதா மேனன் கர்ப்பிணியானதால் அவரை கதாநாயகி
ஆக்கினார்.
இவர், தமிழில் ‘நான் அவன் இல்லை 2’, ‘அரவான்’ படங்களில் நடித்துள்ளார். ஸ்வேதா கர்ப்பிணியான ஐந்தாவது மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை, உண்மையான காட்சிகளை எடுக்க தீர்மானித்திருந்தார் பிளஸ்சி. இதன்படி கடந்த சில மாதங்களாக ஸ்வேதாவின் கர்ப்ப கால நிகழ்வுகளை படம் பிடித்தார். இதே போல பிரசவத்தையும் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள். இதற்கு ஸ்வேதாவின் கணவர் ஸ்ரீவல்சனும் அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வேதாவின் பிரசவ தேதி நெருங்கியது. 3 தினங்களுக்கு மும்பை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனுமதியுடன் பிரசவ அறையில் படப்பிடிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் ஸ்வேதா பெண்குழந்தையை பெற்றெடுத்தார். இதை மூன்று கேமரா உதவியுடன் பிளஸ்சி படம் பிடித்தார். பிரசவத்தின் போது ஸ்ரீவல்சன், பிளஸ்சி மற்றும் 3 கேமராமேன்கள் மட்டுமே உடன் இருந்தனர்.
பிரசவித்த குழந்தைக்கு ஸ்வேதா மேனன் முத்தம் கொடுக்கும் காட்சியுடன் படப்பிடிப்பு முடிந்தது. இதுகுறித்து ஸ்வேதா மேனன் கூறும்போது, ‘பிரசவம் என்பது ஒரு பெண் அனுபவிக்கும் அற்புதமான நிமிஷமாகும். அந்த அனுபவத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பிரசவத்தை படமாக்க சம்மதித்தேன்’ என்றார்.
Key word:பிரசவ படம்,களிமண்.

No comments:
Post a Comment