உலகிலேயே டெல்லி, மும்பையில்தான் உணவு பொருள் விலை மலிவாக உள்ளது. சர்தேச அளவில் உணவு பொருட்கள் விலை நிலவரம் குறித்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு வங்கி ஆய்வு மேற்கொண்டது.
அதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் உலகிலேயே
ஜப்பானின் டோக்கியோ நகரில்தான் உணவு பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளது. அதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா, சூரிச் ஆகிய நகரங்களிலும் கூடுதல் விலைக்கு உணவு பண்டங்கள் விற்கப்படுகின்றன.
டோக்கியோவில் 39 வகையான உணவு பொருட்கள் ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஜெனிவாவில் ரூ.39 ஆயிரத்துக்கும், சூரிச்சில் 38 ஆயிரத்துக்கும் கிடைக்கின்றன.
அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் டெல்லியில் உணவு பொருட்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது. இங்கு அதே உணவு பொருட்கள் முறையே ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.11 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
அவற்றை ஒப்பிடும் போது உலகிலேயே உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இடமாக டோக்கியோ திகழ்கிறது. மிக மலிவான விற்கப்படும் நகரங்களாக மும்பையும், டெல்லியும் உள்ளன.

No comments:
Post a Comment