Pages

Tuesday, 18 September 2012

பள்ளிகளுக்கு 20-ம் தேதி அறிவித்த பொது விடுமுறை ரத்து: அரசு உத்தரவு



டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் அதிரடி முடிவுகளை கண்டித்து 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 20-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், 20-ம் தேதி நடைபெற வேண்டிய 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு, தற்போதைய காலாண்டுத் தேர்வு அட்டவணையின் இறுதிநாளுக்கு மறுநாள் நடத்தப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த முடிவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எனவே 20-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும், தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads