மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற முடிவு செய்ததை அடுத்து, மானிய விலையில் சமையல் காஸ் வழங்குவதில், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை சிறிது தளர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மானிய விலையில், சமையல் காஸ் சிலிண்டர் வழங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு முடிவை, மத்திய அரசு திரும்பப் பெறாது. இருந்தாலும், அதில், சிறு மாற்றங்கள் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்பதை, ஒன்பதாக உயர்த்த பரிசீலித்து வருகிறது.திரிணமுல் காங்கிரஸ் தரப்பில் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்குள்ளும், இந்தக் கட்டுப்பாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், அரசு இதுதொடர்பாக, பரிசீலித்து வருகிறது.மத்திய உணவு அமைச்சர், கே.வி.தாமஸ், நேற்று முன்தினம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும் என்பது, மத்திய தர வகுப்பினர் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என, தெரிவித்திருந்தார். அதனால், கட்டுப்பாட்டில், மாற்றங்கள் தேவை என, வலியுறுத்தியிருந்தார்.
மற்றொரு மத்திய அமைச்சரான, ஹரீஷ் ரவாத்தும், இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். அத்துடன், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீர்பத்திர சிங்கும், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் காஸ் கட்டுப்பாட்டு விஷயத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தலையிட வேண்டும் என, கேட்டிருந்தார்.இதையெல்லாம், கருத்தில் கொண்டே, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் என்பதை, ஒன்பதாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்த

No comments:
Post a Comment