Pages

Wednesday, 19 September 2012

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி.


நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் விநாயகர்
அருள் நிறைய வேண்டும் என்றார். திரையுலகில் மேலும் வளரவேண்டும். தடைகள் விநாயகர் அருளால் அகல வேண்டும் என்றும் கூறினார்.

நடிகை திரிஷா கூறும் போது, விநாயகர் சதுர்த்தியில் எனது தாயும், பாட்டியும் வீட்டில் பூஜை செய்வார்கள். குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். என் பாட்டி கொழுக்கட்டை செய்வார். விசேஷ உணவுகளும் சமைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியில் சென்னையில் ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகா மோத்வானி கூறுகையில், விநாயகர் சதுர்த்தி எனக்கு பிடித்தமான பண்டிகை என்றார். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக எதிர்பார்ப்பேன். என் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விநாயகர் அருள் வேண்டுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads