Pages

Wednesday, 1 August 2012

உணவின் மகத்துவம்-காட்டாமணக்கு,மிளகு

காட்டாமணக்கு:

காட்டாமணக்கு கைவடிவ இலைகளையும்,கருஞ்சிவப்பு நிறத்துளிர்களையும், செந்நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி, காய் முதிர்ந்து வடித்துச் சிதறும். விதை ஆமணக்கு விதைப்போல் சிறிய வடிவில் இருக்கும். இதற்கு ஆதாளை, எலியாமணக்கு
 என்ற பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. இலை, பால், பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவக் குணமுடையது.






              மருத்துவக் குணங்கள்:

  • காட்டாமணக்கு இலை பொதுவாக தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறத்தவும், வீக்கத்தைக் குறைப்பதாகவும் செய்படுகிறது.
  • இதன் இளம் குச்சியால் பல் துலக்கினால் பல்வலி, பல் ஆட்டம், பல்லில் இரத்தம் வடிதல் ஆகியவைகள் குறையும்.
  • காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு உண்டாகும்.
  • இதன் வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வந்தால் பாண்டு, இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெறுவயிறு, குட்டம் ஆகிய நோய்கள் குறையும்.
  • காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும். பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைத்தால் இரத்தப்பெருக்கு குறையும். புண்கள் சீழ்பிடிக்காமல் ஆறும்.
  • காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பூசி வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் குறையும்.
  • காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவந்தால் கட்டிகள் கரையும். கட்டிகள் வலியும் குறையும்
மிளகு:
மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன. காய்ந்த மிளகு 95% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்
.














மிளகில் காணப்படும் சத்துக்கள்:

1.ஈரம் = 13.2 gm
2.புரதம் = 11.5 gm
3.கொழுப்பு = 6.8 gm
4.கனிமங்கள் = 4.4 gm
5.நார் பொருள் = 14.9 gm
6.கார்போஹைடிரேட்டுகள் = 49.2 gm
7.வலிமை சக்தி = 304 kcal
8.கால்சியம் = 460 mg
9.பாஸ்பரஸ் = 198 mg
10.இரும்பு = 16.8 mg
11.கரோட்டின் = 1080 mg
12.தையாமின் = 0.09 mg
13.ரிபோஃபிளேவின் = 0.14 mg
14.நியாசின் = 1.4 mg
இவை அனைத்தும் நன்றாக காய்ந்த மிளகில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads