Pages

Wednesday, 1 August 2012

பலாக்காய்க்-கறி


கறிப் பலாக்காய்: 

 













தேவையான பொருட்கள்:
1.நன்கு முற்றிய கறிப்பலாக்காய் -1
2.வெங்காயம் -1
3.பச்சை மிளகாய் -1
4.தேங்காய்ப் பால் – ¼ கப்
5.பூண்டு- 4 பல்லு
6.இஞ்சி – 1 துண்டு
7.மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்
8.மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன்
9.மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
10.உப்பு – தேவைக்கேற்ப
11.புளிப்பேஸ்ட்  – தேவைக்கேற்ப
12.கடுகு- சிறிதளவு
13.கறிவேப்பிலை – சிறிதளவு
14.எண்ணெய் – 1டீ ஸ்பூன்
செய்முறை:
பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டிகொள்ளவேண்டும்.
உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்க வேண்டும் .
தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் மிளகாய் வெட்டி கொள்ளவேண்டும்.
எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்க வேண்டும்.
மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும். இப்பொழுது சுவையான கறிப்பலாக்காய்கறி குழம்பு ரெடி. இதை சாத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
கறிப்பாலாக்காயின் மருத்துவக் குணங்கள்:
1.கறிப்பாலாக்காயில்  காபோஹைரேட்,வைட்டமின் சி யும் உண்டு.
2கறி.ப்பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
3.கறிப்பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
4.கறிப்பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads