Pages

Thursday, 30 August 2012

பாகற்காய் மருத்துவ குணம்.


பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு:
 நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.
மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தலாம். வெறும் பாகற்காய் மட்டும் நீரிழிவு நோய்க்கு மருந்தல்ல.
மூலம்:
 தினசரி காலை 2 தேக்கரண்டி அளவு பாகற்காய் இலைகளின் சாற்றை அரை டம்ளர் அளவு மோரில் கலந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகி வர மூல நோய் குணமாகும்.
பித்தம்:
 பித்தம் அதிகமாக உள்ளவர்களும் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் காலை வெறும் வயிற்றில் 2-3 தேக்கரண்டி அளவு பாகற்காய் சாற்றை தண்ணீரில் கலந்து பருகிவர நல்ல பலன் தெரியும்.
மூட்டுவலி:
 ரத்தத்தில் அதிகமான யூரிக் அமிலம் உள்ளதால் ஏற்படக்கூடிய ரூமாட்டிஸம், ஆர்த்ரைடிஸ் மற்றும் கவுட் போன்ற மூட்டுவலி உடையவர்கள் பாகற்காயை உண்டுவர நல்ல பலன் தெரியும். வலி அதிகமாக உள்ள இடங்களில் பாகற்காயை அரைத்து பற்று போல போட்டு வர வலி குறையும். மூட்டுவலி நிவாரணம் கிடைக்கும்.
Key word:மூட்டுவலி,பித்தம்,மூலம்,நீரிழிவு .

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads