சாம்நகர், ஆக.30
குஜராத் மாநிலத்தில் சாம் நகர் மாவட்டம் ஷர்மத் என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களில் வீரர்கள் இன்று பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேராக மோதி நொறுங்கி கீழே விழுந்தன.
தகவலறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது. மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment