Pages

Saturday, 18 August 2012

இங்கிலாந்தில் இந்திய மூலிகைகள், ஹோமியம் பறிமுதல்


இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட புலி நகங்கள், மூலிகை மருந்துகள், மசாஜ் எண்ணெய்கள் மற்றும் மாட்டு ஹோமியம் ஆகியவற்றை இங்கிலாந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 
இந்தியாவில் இருந்து அந்த பொருட்கள் 45 பெரிய பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பர்மிங்காமில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை பெலிக்டோவ் துறைமுகத்தில் அதிகாரிகள் மடக்கினர்.
 
இந்த பொருட்கள் மேற்கு மிட்லேண்ட்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிய மக்களால் மிகவும் விரும்பப்படும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தடை செய்யப்பட்டுள்ள புலி நகங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியது குறித்து இந்திய சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் இந்தியாவில் இருந்து அவற்றை ஏற்றுமதி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் பர்மிங்காம் இறக்குமதி நிறுவனத்தை இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads