வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள பலு நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருந்தது. இதனால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்தோனேசியாவில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் சுனாமி பீதியில் இருக்கின்றனர்.

No comments:
Post a Comment