Pages

Saturday, 18 August 2012

நூலக வரலாறு.

ஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் களிமண் தகடுகளில் எழுதினர். அதை சூளையில் வைத்து சுட்டு பாதுகாத்து வந்தனர். இவையே அரண்மனையிலும் கோவில்களிலும்
தனித்தனியே துறைகள் வாரியாக வைக்கப்பட்டிருந்த தகவல் ஏடுகளாகும். இதுவே நூலக தோற்றத்தின் முன்னோடி எனலாம்.
பின்னாளில் எகிப்தியர்கள், பாப்பிரஸ் (பேப்பர்) என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு. 300-ஆம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பரப்பிரஸ் உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டது. இது தற்போதைய நூலகத்தின் முன்மாதிரியாகும்.
இதற்குப் பிறகு ரோமானியர்கள்தான் பொது நூலக முறையை முதன் முதலில் ஏற்படுத்தினர். ஜூலியஸ் சீசரின் பங்கு இதில் மிக அதிகமாக இருந்தது. வசதி படைத்தோர் பலரிடம் உதவி பெற்று பொதுநூலகத்தை அவர் நிறுவினார். 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் 28 பொது நூலகங்கள் உருவாக்கப்பட்டு இருந் ததற்கான சான்றுகள் இருக் கின்றன.
பிறகு வந்த கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளி ல் ஓர் அங்கமாக நூலகங்களை உருவாக்கி செயல்பட்டனர். பின்னர் பல்கலைக்கழகங்களும் மாணவர் களுக்காக நூலகங்களை நிறுவத் தொடங்கின. இவ்வழியில் பாரிஸ், பிரான்ஸ், பிரோனிஸ் மற்றும் எடின்பர்க் ஆகிய பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவின. 1,400-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ஒரு நூலகத்தை நிறுவியது. இதற்கு போட்லீயின் என்று பெயர். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.
இன்று உள்ள பொது நூலகங்கள் அமைப்பு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு தோன்றியதுதான். 1850-ல்தான் ஆங்கிலேய பாராளுமன்றத்தில் பொது நூலகங்கள் நிறுவிக் கொள்ள ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து வளர்ச்சி பெற்றுத்தான் அனைத்து இடங்களிலும் பொதுநூலகங்கள் நிறுவப்பட்டன.
Key word:நூலக வரலாறு.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads