Pages

Tuesday, 7 August 2012

இன்றைய வேளாண்மை! மலைவேம்பு

இன்றைய வேளாண்மை!

மலைவேம்பு


 

விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம். இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
மலைவேம்பு
 மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரியமரவகைகளில் ஒன்று. ப்ளைவுட், ரெடிமேட் டோர், வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங் உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது.
சிறப்புகள்:
குறைந்த வருடங்களில் மற்ற மரவகைகளை காட்டிலும் அதிக வருமானம். ஒரு ஏக்கருக்கு ஏழு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம். குறைந்த அளவு நீர்வளம்கொண்ட பகுதிகளிலும் நன்கு வளரும். வடிகால் வசதி கொண்டஅனைத்து நிலங்களுக்கும் ஏற்றது. குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி)90 சதவீதம் பக்க கிளைகள் வராது. மிக நேராகவளரும் தன்மை கொண்டது.
அதிக மரக்கழிவு இல்லை. பராமரிக்க குறைந்த ஆட்களேதேவை. மலைவேம்பு நடவு செய்த5-ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம்.இலை ஆடுகளுகு நல்ல தீவனமாகப் பயன்படுகிறது. விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதால் தேவையும், விலையும் எப்போதும் உண்டு. கரும்பு, நிலக்கடலை, மிளகாய், மரவள்ளி, மஞ்சள், உளுந்து,பாக்கு மற்றும் தென்னையிலும் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.குறிப்பு:இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த நீர்வளம் உள்ள பகுதிகளிலும் மலைவேம்பு வளர்க்கலாம்.ஒரு ஏக்கரில் கரும்பு, தென்னை, வாழை பயிரிடத் தேவைப்படும்நீர்வளத்தை கொணடு ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.
Key word:மலைவேம்பு

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads