Pages

Tuesday, 7 August 2012

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானி

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானி:

விண்கலம் இறங்கிய இடத்தை தேர்வு செய்தார்  பூமியில் இருந்து 57 கோடி கி.மீட்டர் தூரத்தில் உள்ள சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு
 நடத்தி வருகிறார்கள்.
அங்கு மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா? என ஆராய சில விண்கலன்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
எனவே, மேலும் தீவிரமாக ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பினர். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரூ.12 ஆயிரம் கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன விண்கலம் சுமார் ஒரு டன் எடை கொண்டது.
மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்ற இந்த விண்கலம், நேற்று செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப்பகுதியில் கேலே பள்ளத்தாக்கில் தரை இறக்கப்பட்டது. அங்கு 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்திய விஞ்ஞானி அமிதாப் கோஷ் என்பவரும் உள்ளார். இவர்தான் கியூரியாசிட்டி விண்கலத்தை கேலே பள்ளத்தாக்கில் இறக்குவதற்கான இடத்தை தேர்வு செய்தார்.
இந்த விண்கலம் இறக்க தகுதியான இடம் இதுதான். இறங்கும்போது செவ்வாய் கிரகத்தின் தரையில் மோதி நொறுங்காது என முடிவெடுத்து அவர் இந்த இடத்தை தேர்வு செய்தார்.
இதற்கிடையே கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது. அதில், கியூரியாசிட்டி விண்கலத்தின் நிழல் இருப்பது தெரிகிறது. எனவே, அந்த விண்கலம் பத்திரமாக உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அணுசக்தியில் இயங்கும் அந்த விண்கலத்தில் நவீன ஆய்வு கூடம் உள்ளது. லேசர் கதிர் கருவி, பாறையை துளை போடும் கருவி உள்ளிட்ட 10 முக்கிய கருவிகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய்க்கிரகத்தில் கல், மண் போன்வற்றை வெட்டி எடுத்து ஆய்வு செய்து இதுபற்றிய விவரங்களை பூமிக்கு அனுப்பும். மேலும் 2 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து ஆய்வு நடத்தும்.
Key word: செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்  ஆய்வு

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads