Pages

Monday, 6 August 2012

மலச்சிக்கல், கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத் தளர்ச்சி

 உபாங்கபந்தாசனம்

 செய்முறை:- முதலில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வளைத்து இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு, முழங்கால் முட்டிகள் இரண்டையும் முகத்துக்கு அருகே கொண்டுவர வேண்டும். முகத்தை முழங்கால்களைத் தொடுவதுபோல் முன் நோக்கி வளைத்துத் தாழ்த்த வேண்டும்.

இந்நிலையில் முழங்கால்கள் இரண்டும், இரண்டு அக்குள்களுக்கு வந்து பொருந்தும். கால்கள் தலைக்குமேல் நீட்டிக்கொண்டு இருக்கும். முகம் இரண்டு முழங்கால்களுக்கும் இடையே இருக்கும். இதுதான் இவ்வாசனத்தின் நிலையாகும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனத்தைக் கலைத்துவிட்டு மல்லாந்து படுத்துபடியே சற்று இளைப்பாறிவிட்டு, மீண்டும் 3 அல்லது 4 முறை இவ்வாசனத்தைச் செய்தால் போதும்.

பயன்கள்
மலச்சிக்கல், கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகள் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா உபாதைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

குறிப்பு
இரத்த அழுத்தமுள்ளவர்கள், இதயக்கோளாறுகள் இருப்பவர்கள், கருவுற்ற பெண்கள், வயிற்றில் பெரிய ஆப்பரேசன் செய்துகொண்டு மூன்று அல்லது நான்கு மாதகாலமாவது ஆகாதவர்கள் இவ்வாசனத்தை செய்ய வேண்டாம்.
Key word: மலச்சிக்கல், கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத் தளர்ச்சி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads