Pages

Monday, 6 August 2012

அடுத்த வருடம் திரிஷா, ராணா திருமணம்

திரிஷாவுக்கும், ராணாவுக்கும் அடுத்த வருடம் திருமணம்

 நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
 ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவின் மகன் ஆவார்.
தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகார்ஜுனா இருவரும் ராணாவுக்கு மாமன்கள். ராணா தெலுங்கில் “லீடர்” என்ற படம் மூலம் 2010-ல் நாயகனாக அறிமுகமானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ராணாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
திரிஷா தெலுங்கில் பிசியாக நடித்ததால் அவருக்கும், ராணாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றனர். பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்றார்கள். ஆனால் இருவரும் காதலிப்பதை தொடர்ந்து மறுத்து வந்தனர். நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று கூறினர்.
சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் இருவரும் இணைந்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
ராணா மார்பில் திரிஷா சாய்ந்தபடியும் ஒருவருக்கொருவர் ஐஸ்கிரீம் ஊட்டி விடுவது போன்றும் படங்கள் வந்துள்ளன. இது அவர்கள் நெருக்கத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் காதலிப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads