சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய மணிக்கூண்டு 150 வருட பாரம்பரியம் கொண்டது. எந்த திரைப்படத்தை பார்த்தாலும், சென்னைக்கு கதாநாயகன் வந்து இறங்கினால் அதற்கு அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலைய மணிக்கூண்டைத்தான் காட்டுவார்கள்.சென்னைக்கு அடையாளமாக உள்ள இந்த மணிக்கூண்டில் இன்று மாலை 4 மணியளவில் ஒரு வாலிபர்,
மணிக்கூண்டின் மேலே சென்று உச்சியில் இருக்கும் இடிதாங்கி கம்பியில் விறுவிறுவென ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், பயணிக்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகம், இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்பானது.
தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அந்த வாலிபரை சமாதானம் செய்து, கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரம் போராடியும் அந்த வாலிபர் சமாதானம் அடையவில்லை.

No comments:
Post a Comment