Pages

Wednesday, 29 August 2012

கொய்யாப்பழம்-மருத்துவக் குணங்கள்.




நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும்
 ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல

நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

  • கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
  • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
  • கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
  • கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
  • கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


இவ்வளவு அருமை பெருமையை பெற்ற கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி உங்களுக்கு போனஸாக தரப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
 நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள்,
 சர்க்கரை 750 கிராம்,
 சிவப்பு நிற  கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன்,
 தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை: 
10 அல்லது 12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும். நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும். இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும். கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள். இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம். இதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
Key word:கொய்யாப்பழம்-மருத்துவக் குணங்கள்,கொய்யாப்பழ ஜாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads