Pages

Tuesday, 31 July 2012

இயற்கை உணவு-தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால்
தேவையானவை:

 தேங்காய்-அரைமூடி
முந்திரி பருப்பு- 5 அல்லது 6
ஏலக்காய்-1
பெரிய தேங்காயின் அரைமூடியை எடுத்துக் கொண்டு அதனுடன் 5 அல்லது 6 முந்திரி பருப்புகளை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொண்டு ஏலக்காய் சேர்த்து வேண்டிய அளவு நீர் சேர்த்து அரைத்து
 பிழிந்து சாறு எடுக்கவும்.
இந்தப்பால் மாட்டுப்பாலை விட கெட்டியாக இருக்கும்.
அதிக சத்து நிறைந்தது. 
  • புலால் உணவை உண்டு சுலபமாக செரிக்கவைக்கும் சூரர்கள் கூட இந்த பாலை செரிக்க வைப்பது கடினம்.
  • தேங்காய்ப் பாலை குழந்தைகள் அருந்த நினைவாற்றலும் உடல் பலமும் பெருகும்.
  • உடல் நலமும் பெருகும் நோயுற்றவர்கள் குறைந்த அளவே அருந்துவது நலம் பயக்கும்.
  • இரவு நேரங்களில் வெறும் தேங்காயை மென்று தின்பது நரம்பு தளர்ச்சிக்கு நன் மருந்தாம்.
  • மாலையில் தேங்காய்ப் பால் நீரழிவை தடுக்கும்.
  • தேங்காயை பச்சையாகவே உண்பது மிகுந்த பலனை தருமாம்.
  • தேங்காயை உண்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads