Pages

Tuesday, 31 July 2012

எள் உருண்டை,தேன் நெல்லிக்காய்,அகத்திக்கீரை பொரியல்

1,எள் உருண்டை
தேவையானவை:
கறுப்பு எள் – 100 கிராம், வெள்ளை எள் – 100 கிராம், வெல்லம் – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:
கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை   தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு:
 எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை  பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை  துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.

2,தேன் நெல்லிக்காய்
தேவையானவை:
 பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – 100 மில்லி, சர்க்கரை – 200 கிராம்.
செய்முறை:
 நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.
குறிப்பு:
 தினமும் இரு துண்டு சாப்பிட்டால்… ரத்த சோகையைத் தடுக்கும்.

3,அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை:
 அகத்திக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், எண்ணெய் – முக்கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
 அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து,  தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.
குறிப்பு:
அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது… குடல் புண்னை ஆற்றும்.   கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.
Key word:எள் உருண்டை,தேன் நெல்லிக்காய்,அகத்திக்கீரை பொரியல்.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads