Pages

Tuesday, 31 July 2012

மத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு

மத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு

 மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நவம்பர் மாதம்18ம் தேதி நடைபெற உள்ளது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் 2ம் தாளுக்கும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான பதில்களை தேர்வு செய்து எழுதும் வகையிலான அப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்ட இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு தாள் எழுத ரூ.500ம்,  இரண்டு தாளும் ரூ.800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு ரூ.250ம், இரண்டு தாளுக்கு ரூ.400ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads