Pages

Tuesday, 31 July 2012

சிம்ரனின் ஜாக்பாட்டில் ஆண்களும்பங்கேற்க வாய்ப்பு!

சிம்ரனின் ஜாக்பாட்டில் ஆண்களுக்கும் வாய்ப்பு!
 நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆண்களுக்கும் வாய்ப்பு
அளிக்கப்படுகிறது. ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிழ்ச்சி ஜாக்பாட். நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஜெயா டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றும் வகையிலும், மேலும் பிரபலப்படுத்தும் வகையிலும் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் எண்ணிக்கையும், அவைகளின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் கேள்வி - பதில் என்ற அறிவுபூர்வ எல்லையைத் தாண்டி, பெண்களுக்கான இந்த கேம் ஷோவில் ஆண்களும் போட்டியாளர்களாக இப்போது பங்கேற்கிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads