Pages

Monday, 16 July 2012

டிஜிட்டல் மயமாகிறது சிவாஜி நடித்த திரைப்படங்கள்

 ``கர்ணன்'', வெற்றியைத் தொடர்ந்து

 சிவாஜி நடித்த ``பாசமலர்'', ``திரிசூலம்'', ``சொர்க்கம்'' ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
சிவாஜியின் ``கர்ணன்' படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழவதும் 72 தியேட்டர்களில் சமீபத்தில் ரிலீசானது.
இப்படம் 15 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடின.சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப் தியேட்டரில் 100 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
திரிசூலம் இன்று முதல் சென்னை அகஸ்தியா தியேட்டரில் தினமும் 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. இதில் சிவாஜி 3 வேடங்களில் நடித்துள்ளார். ஜோடிகளாக கே.ஆர்.விஜயா, ஸ்ரீப்ரியா, ரீனா நடித்துள்ளனர். கே.விஜயன் இயக்கி உள்ளார்.
``சொர்க்கம்'' படத்தில் கே.ஆர்.விஜயா ஜோடியாக நடித்துள்ளார். ராமண்ணா டைரக்டு செய்துள்ளார்.
வருகிற 6-ந்தேதி முதல் உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஸ்ரீநிவாசா, எம்.எம்.தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.
பாசமலர், அண்ணன்-தங்கை பாசத்தை சித்தரித்து எடுக்கப்பட்ட படம். இதில் சிவாஜி தங்கையாக சாவித்ரி நடித்துள்ளார். மலர்ந்தம் மலராத பாதி மலர் போல மற்றும் எங்களுக்கும் காலம் வரும், வாராய் என் தோழி, வாராயோ மணப்பந்தல் காண வாராயோ போன்ற பாடல்கள் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபரமானது என்பது விசேஷம்.
இந்த படமும் இப்போது நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads