அஞ்சல் அலுவலகங்களில் 6.5சதவீத தள்ளுபடி விலையில் தங்கநாணயங்கள் விற்பனை:
புஷ்ய நட்சத்திர தினத்தையொட்டி வரும் 19 -ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலங்களில் 6.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுப்பற்றிய விபரம் வருமாறு இந்திய அஞ்சல் அலுவலகம் ரிலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகின்றது. 24 கேரட் தங்க நாணயங்கள் 0.5 கிராம், 1 கிராம், 5 கிராம், 8 கிராம், 10 கிராம், 20 கிராம், மற்றும் 50 கிராம் நாணயங்களாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு வால்காமி (ஸ்விஸர்லாந்து) சான்றிதழுடன் விற்பனை செய்யப்படுவதாகும். இந்த தங்க நாணையங்களுக்கு பொதுமக்களிடைய பெரும் வரவேற்பு கிடைத்ததையொட்டி இத்திட்டம் தற்போது தமிழகத்தில் உள்ள 283 அஞ்சல் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 19.7.2012 (வியாழக்கிழமை) அன்று புஷ்ய நட்சத்திர தினத்தையொட்டி தங்க நாணயங்கள் 6.5 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்று ரிலயன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இச்சிறப்பு சலுகை அன்று ஒரு நாள் மட்டுமே. எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு சலுகையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அஞ்சல்துறை (தமிழ்நாடு வட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கின்றது

No comments:
Post a Comment