Pages

Tuesday, 17 July 2012

தளர்வுறச் செய்யும் உடற்பயிற்சி


தளர்வுறச் செய்யும் உடற்பயிற்சி:
 உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது தளர்வுறச் செய்யும் கலையோடு ஆரம்பியுங்கள். இது உடலுக்கு தேவையானதும், உபயோகமானதும் ஆகும். முதலில் தரையின் மீது கால்களை அகட்டியும், கைகளை விரித்துக்கொண்டும் படுங்கள். கைகளையும், கால்களையும் விரிக்கும்போது மூச்சினைப் பிடித்துக் கொள்ள வேண்டும்
.
பின்னர், மெதுவாக வாயைத் திறந்து மூச்சினை வெளியே விட வேண்டும். மேலும், முழுமையாகத் தளர்ச்சியடையும் வண்ணம் மனத்தை ஒரு நிலைப்படுத்த வேண்டும். அழமாக எப்படிச் சுவாசிப்பது என்பதைத் உங்கள் பயிற்சியாளரிடம் தெரிந்து கொள்வது, பலனைத்தரும்.
பின்புறம் தரையிலிருக்குமாறு படுத்து முழங்காலை மடித்துப் பாதம் தரையில் தட்டையாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சினை உள்ளிழுத்துக்கொண்டு வயிற்று தசைகளைச் சுருங்கச் செய்ய வேண்டும். பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விட்டு, இத்தசைகளைத் தளர்வுறச் செய்ய வேண்டும்.
அப்போது உடற்பயிற்சி செய்பவர்கள் விலா எலும்புகள் பக்கவாட்டில் விரிவதை நன்றாக உணர முடியும். உள்ளேயும், வெளியேயும் மெதுவாக மேலும் ஒருமுறை சுவாசிக்க வேண்டும். பின்னர், சாதாரணமாக ஒரு சில முறை சுவாசித்த பின்னர், ஆழ்ந்த சுவாசித்தலை இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் திரும்பச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads