Pages

Thursday, 5 July 2012

ஆன்மிக சிந்தனைகள்- சாய்பாபா

ஆன்மிக சிந்தனைகள்-சத்யசாய்!

 மனதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் ஆசைகளைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டாகிவிடும்.
 இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெறுப்பவரிடமும் அன்பு காட்ட முயற்சியுங்கள்.
திட்டவோ, அடிக்கவோ வருபவரிடம் கூட புன்னகை காட்ட
 பழகிக் கொள்ளுங்கள்.
 நல்லவற்றின் மீது மட்டும் பார்வையைச் செலுத்துங்கள். தீயவற்றைக் கண்டு அஞ்சி விலகுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை மதிப்புஉடையதாக அமையும்.
 செயலில் ஈடுபடும்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். இதனால் அவை எளிதாக நிறைவேறுகிறது. உடலில் சோர்வும் ஏற்படாது.
 கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அப்படியும் கோபம் வந்தால் பேசுவதைக் கைவிடுங்கள். கோபத்துக்கு மருந்து மவுனம். இதைக் கடைபிடித்தால் கோபத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.
 நோயாளி உணவை சாப்பிட முடியாமல் வெறுத்து ஒதுக்குவான். அதுபோல, உள்ளம் நலிவுற்றவன் அன்பு வடிவான கடவுளைப் புறக்கணிக்கிறான்.
 சாய்பாபா

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads