Pages

Wednesday, 4 July 2012

ஜாமீன் இன்றி கல்விக்கடன்

ஜாமீன் இன்றி ஏழரை லட்சம் வரை கல்விக்கடன்:


மாணவர்களுக்கு ஜாமீன் இல்லாமல், 3வது நபர் உத்தரவாதம் இல்லாமல் ரூபாய் ஏழரை லட்சம் வரை வழங்கும் புதிய திட்டம் இந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.



படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் கல்விக்கடன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் இன்ஜினியரிங், மருத்துவம், நிர்வாகம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அரசு வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம்.

படிக்கும்போது கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும். வட்டியும் குறைவு தான். வங்கிகளுக்கு ஏற்ப 10 சதவீதம் மற்றும் 11 சதவீதம் என்ற அளவில் வட்டி உள்ளது. மாணவிகளுக்கு 1/2 சதவீதம் வட்டி குறைவு, கடனை படித்து முடித்தது ஒராண்டிற்குள் வட்டியுடன் செலுத்த வேண்டூம்.

தற்போது படிக்கும் காலத்தில் வட்டியையும் கட்ட வேண்டாம். படித்து முடித்ததும் அசல் மற்றும் வட்டியை சேர்த்து கட்ட வேண்டும். உள்நாட்டில் படிப்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும கல்விகடன் வழங்கப்படுகிறது.

நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு கல்விகடன்  திட்டம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. எனினும் நடைமுறையில் மாணவர்கள் அவ்வளவு கடனுக்கு ஜாமீனோ அல்லது 3வது நபர் உத்தரவாதமோ கேட்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் வங்கி மேலாளர்கள் எவ்வளவு கல்விக்கடன் என்றாலும் பாதுகாப்பு வசதிக்காக ஜாமீன் அல்லது உத்திரவாதம் கேட்கத்தான் செய்கிறார்கள்.

ஜாமீன் இன்றி 3வது நபர் இல்லாமல் ரூ.7 1/2 லட்சம் கல்விக்கடன் வழங்கும் திட்டம் உன்னதமான திட்டம் என்றாலும் நடைமுறையில் அது எந்த அளவிற்கு செயல்படுத்தப்படும் என்பதை வைத்துத்தான் இந்த திட்டத்தின் வெற்றி அமைந்து இருக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads