Pages

Saturday, 2 June 2012

தியானம், யோகா ஆன்மீகத்துக்கு மாறிய நயன்தாரா

  நயன்தாரா தீவிர ஆன்மீக வாதியாக மாறியுள்ளார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பிரபுதேவாவை மணப்பதற்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார்.
அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு சென்றார். திருப்பதி வெங்கடாசலபதி கோவில், குருவாயூர் கோவில் பகவதி அம்மன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தார்.
நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை அசைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார்.
பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின் அவரிடம் இன்னும் ஆன்மீக சிந்தனைகள் தீவிரமாகியுள்ளது. தியானம், யோகாவில் தீவிரம் காட்டுகிறார். படப்பிடிப்பு இடைவேளைகளில் கண்களை மூடி தியானம் செய்கிறார். அவர் முகத்தில் முன்பிருந்த சோகம், பதட்டங்கள் விலகியுள்ளது. சாந்தமாக மாறியுள்ளார்.
பேச்சு, பேட்டிகளிலும் முதிர்ச்சியை காண முடிகிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்றதாக சொல்கிறார். பிரச்சினைகளில் இருந்து மீண்டு விட்டதாகவும் கூறி வருகிறார்.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads