- 6-ந்தேதி நடைபெற உள்ள இந்த அரிய நிகழ்வை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 5.50 மணி முதல் 10.22 மணி வரை காண முடியும். இது போன்ற நிகழ்வை இந்தியாவில் இனி 2255-ம் ஆண்டு ஜுன் 9-ந்தேதிதான் காண முடியும். சூரியனை சுக்கிரன் கடப்பது பற்றி பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி ஜோதிட ரீதியாக அளித்த விளக்கம் வருமாறு:-
- சூரிய கிரகத்தை சுக்கிரன் (வெள்ளி) கிரகம் 6-ந்தேதி கடக்கும் போது சுக்கிரன் அஸ்தமனமாகும். சுமார் 15 நாட்கள் வரை (அதாவது 20-ந்தேதி வரை) சுக்கிரன் கிரகம் அஸ்தமனமாவதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சுக்கிரனின் அஸ்தமனம் காரணமாக சித்திரை, விசாகம், அனுஷம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட் சத்திரக்காரர்களுக்கு தோஷம் உண்டாகும். சுக்கிரன் அஸ்தமனமாகும் இந்த 15 நாட்களில் 6 நட்சத்திரக்காரர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த கால கட்டத்தில் அவர்கள் திருமணம் போன்ற விசேஷங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையாக வெளியிடுவது நல்லது.
- தேவை இல்லாததை பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். காதலுக்கு காரண கர்த்தாவாக திகழும் சுக்கிரன் மறைவதால் கணவன்-மனைவி இருவரும் 15 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவது நல்லது. சுக்கிரன் அஸ்தமனம் காரணமாக 6-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை கடல், நதி, போன்றவற்றால் அதிக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- எனவே 6 நட்சத்திரக்காரர்கள் கூடுமானவரை நதி கடலில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். உடன் பணியாற்றுவோரிடம் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் புதிய தொழிலை தொடங்க கூடாது.
- வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் அபாயம் இருப்பதால் தேவையில்லாமல் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். கலைஞர்கள், அரசியல் வாதிகள் சமூக சேவகர்கள் 15 நாட்களும் தங்களது கருத்துக்களை எச்சரிக்கையாக வெளியிடுவது நல்லது. தேவை இல்லாமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் மற்றவர்களுடன் நட்புறவுடன் இருப்பது நல்லது. பெண்கள் கணவர் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை ஏற்படும். இதனால் அதிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
- தோஷம் நீங்க பரிகாரம்...........
- சூரியனை கடக்கும் போது சுக்கிரன் அஸ்தமனமாவதால் 6 நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
- சித்திரை நட்சத்திரக்காரர்கள்: 15 நாட்களும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். பார்வையற்றோருக்கு நிதி உதவி செய்தால் தோஷம் நீங்கும்.
- விசாகம் நட்சத்திரக்காரர்கள்: தட்சிணாமூர்த்தியை நினைத்து வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வஸ்திர தானம் வழங்குவது சிறப்பைத் தரும்.
- அனுஷம் நட்சத்திரக்காரர்கள்: லட்சுமி நாராயணரை நினைத்து வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிப் வேண்டும். ஏழைகளுக்கு நவதானியங்கள் தானமாக அளிப்பது சிறப்பைத் தரும்.
- பூரட்டாதி நட்சத்திரகாரர்கள்: சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. பார்வையற்றோருக்கு நிதி உதவி அளிப்பது சிறப்பைத் தரும்.
- உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள்: சாஸ்தாவை மனதில் நினைத்து 15 நாட்களும் விரதம் இருந்து வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது சிறப்பைத் தரும்.
- ரேவதி நட்சத்திரக்காரர்கள்: விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது நல்லது. அரங்கநாதரை மனதில் நினைத்து வீட்டில் நெய்தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பைத் தரும்.
Saturday, 2 June 2012
6 நட்சத்திரக்காரர்களுக்கு ஆபத்து: தோஷம் நீங்க பரிகாரம்
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
ADVERTISE HERE.
space for ads

No comments:
Post a Comment