Pages

Saturday, 9 June 2012

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:

கர்ப்பிணியின் ஒரு உடலில் இரு உயிர்கள் இயங்கிக்கொண்டிருக்கும். அதனால் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்க ஆழ்ந்து மூச்சுவிட்டு மனதையும், உடலையும் அமைதிப்படுத்த வேண்டும். பிரணயாமத்தின் மூலம் அதிக ஆக்சிஜன் உடலுக்குள் செல்வது இரு உயிர்களுக்குமே நல்லது. அது கருக்குழந்தையின் மூளை செல் வளர்ச்சிக்கும் ஏற்றதாகும்.

கர்ப்பிணிகள் தியானத்தில் இருந்தபடி ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவகப்படுத்தி அது தன் வயிற்றில் இருந்து சந்தோஷமாக வளர்வது போலவும், பிறப்பதுபோலவும், தன் கைகளில் தவழுவதுபோலவும் கற்பனை செய்யவேண்டும். அடி வயிற்றில் கையை வைத்துக் கொண்டு, நல்ல சிந்தனைகளை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

அதுவும் குழந்தையை சென்றடையும்.   கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் பத்துமாதமும் அவர்கள் அனுபவித்து வயிற்றுக்குள் குழந்தையை வளர்ப்பார்கள். அதிக வலியின்றி அவர்களுக்கு சுக பிரசவமும் ஏற்படும். கர்ப்பிணிகளின் இடுப்பு எலும்பின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் சில யோகாசனங்களையும் பெண்கள் செய்தால் பிரசவம் எளிதாகும்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads