அமலாபால் கவர்ச்சிக்கு மாற முடிவு செய்துள்ளார். ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள மருமகளாக நடித்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
பின்னர் மைனா படத்தில் குடும்ப பாங்காக வந்தார். அப்படம் ஹிட்டானதால் பெரிய ஹீரோக்கள் அமலா பாலை ஜோடியாக சேர்த்தனர். தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமுடன் நடித்தார். வேட்டை படத்தில் ஆர்யா ஜோடியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த் ஜோடியாகவும் நடித்தார். தற்போது மலையாளத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களில் எல்லாம் கவர்ச்சியாக நடிக்க மறுத்து விட்டார்.
தற்போது சக நடிகைகளின் போட்டியை சமாளிப்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:-
கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. சினிமாவில் கவர்ச்சி தேவையாகிவிட்டது. நீச்சல் உடையில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். அப்படி நடிக்கவும் நான் தயார். நடிகைகள் எல்லோருமே நீச்சல் உடையில் நடிப்பதற்காக தயாராக இருக்கிறார்கள். நானும் விதிவிலக்கல்ல. கதைக்கு தேவை என்றால் நீச்சல் உடையில் நடிப்பேன்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.

No comments:
Post a Comment