Pages

Monday, 4 June 2012

நாளை வானில் அரிய காட்சி: மதுரையிலும் காணலாம்

வெள்ளிக்கிரக இடைமறிப்பு!
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை (ஜூன் 6ல்) வெள்ளிக்கிரகம் நகருகிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும்.
105 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது. மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் இயக்கம் சார்பில் டெலஸ்கோப் மூலம் காலை 8 முதல் 9 மணி வரை மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல பள்ளிகளிலும் இந்நிகழ்வை அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மக்களுக்கு நடத்த உள்ளனர். இதற்காக 50 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.எப்படி தெரியும்?: சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும். இம்முறையின்படி பார்க்கலாம். பள்ளி, கல்லூரிகளில் டெலெஸ்கோப் இருந்தால் அதன் மூலம் ஒளியை வெண்திரையில் பிடித்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் சூரியனை பார்க்க கூடாது. பார்த்தால் அந்நேரமே கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளன.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads